கவிதை

எனது நீண்டநாள் ஆசை தமிழில் பதிவு

Posted on Updated on

எனது நீண்டநாள் ஆசை தமிழில் பதிவு எழுதுவதுதான் அனால் எழுத தமிழ்தான் வரமாட்டேங்குது. ஆனாலும் நான் விடுவதாக இல்லை. கடைசியாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் blogஐ தொடங்கிவிட்டேன் . . . இதற்கு இரு காரண்ங்கள் உண்டு,

1. எனது தமிழ் பற்று + எனது தமிழ் கவலைக்கிடமான இடத்தை அடைந்மை .

2. எனது நண்பர்களி blogஐ பார்த்து உண்டான ஆசை (விஷேடமாக subankan)

எனது தமிழ் blogஐ தொடங்கிய பின்பு எனது நிலை ஒரு கவிதை வடிவமாக . . . .

தமிழாம் வெட்கமாம் பற்றாம்
ஒருவர் தொடகிவிட்டார் பதிவு எழுத‌
அது யாருமல்ல தனது கன்னி கவிதையாம் என
பெருமையடித்து வெட்டிவீழ்த்தும் இம்மானிதர்தான்.

பதிவெழுதலின் தகமை வெட்டியாம்மென கேட்டாராம்
உடனே தொடங்கிவிட்டார் தனது தமிழ் பதிவை
ஆனால் இம் மனிதருக்கு தெரியவில்லை வெட்டியுடன்
கொஞ்சம் மசாலாவும் மன்டையில் இருக்க வேண்டுமென்று.

எடுத்தாராம் பேனையை தொடுத்தாராம் வார்த்தையை
பிறந்ததாம் தனது கன்னி கவிதையென புலம்பினார்
ஆடிய காலும் பாடிய வாயும் சும்ம இறுக்காதது போல
இவரும் சும்மாயிருக்காமல் போட்டாராம் பதிவை இணையத்தில்.

பதிவை இட்டதும் பார்கணுமே எவரது கூத்தாட்டதை
மனதில் பூரிப்பு வாயில் சிரிப்பு .. ஐய்யோ ஐய்யோ

பின்ணூடல்களின் விளைவை அறியாத இம் மனிதனின் கதி …
கோவிந்தாவோ கோவிந்ததான் ..

அஜித்

Advertisements